•   Sunday, December 7, 2025
NIRF Logo

St. Joseph's College of Arts & Science

(Autonomous), Cuddalore

Affiliated to Annamalai University, Annamalai Nagar, Chidambaram

NAAC Logo

Department
பேச்சு மேடையும் பேசும் மெய்ப்பாடும் - பயிற்சிப் பட்டறை
Tamil

கடலூர், தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 16.09.2025 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அருட்தந்தை பால்ராஜ்குமார் அரங்கில் பயிற்சிப்பட்டறை நிகழ்வு இனிதே நடைபெற்றது. இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி கா. திரிஷா வரவேற்புரை  வழங்கினார்.

கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் M. சுவாமிநாதன் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரியின் முதல்வர் மற்றும் கணினித்துறைத்தலைவர் முனைவர் . அருமைசெல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கடலூர், பெரியார் அரசு கலைக்கல்லூரிதமிழ்த்துறை, இணைப்பேராசிரியர்  முனைவர் . அருணாசலம் அவர்கள் பேச்சு மேடையும் பேசும் மெய்ப்பாடும் என்ற பொருண்மையில் சிறப்புரையாற்றினார். அதில் மேடைப்பேச்சு என்பது பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பேச்சு இயல்பாகவும், எதிர்மறையாகவும் அமைதல் வேண்டும். சிந்தனைகளை தூண்டக்கூடிய வகையில் பேச்சாளரின் பேச்சு இடம்பெற வேண்டும். பேச்சாளர் பேசும்போது அரங்கில் இருக்கும் பார்வையாளர்களுக்கு ஏற்ப தன்னுடைய பேச்சாற்றலை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று  மேடைப்பேச்சின் திறன் குறித்து எடுத்துரைத்தார்.

இளங்கலை மூன்றாமாண்டு மாணவி கா. ஷர்மிளா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வானது தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் . வனத்தையன் அவர்களின் நெறிகாட்டுதலில் முனைவர் சி.மரியசெல்வம் லேக்கதோஸ் மற்றும் முனைவர் சி. பத்மநாபன் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவிகளின் ஒத்துழைப்போடு இனிதே நிறைவுற்றது.